IPL2024 இறுதிவரை போராடிய பஞ்சாப் -SRH வசமான வெற்றி..!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23வது போட்டியாக சண்டிகரில் (9ம் தேதி) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் மிக கூர்மையான வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டி தொடரில் ஹைதராபாத் அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இப்போட்டியில் வெற்றி பெற, பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் ஜெய்தேவ் உனட்கட் 26 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார்.

கடைசி சில ஓவர்களில் வேகமாக துடுப்பெடுத்தாடிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும், அசுதோஷ் சர்மா 15 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் எடுத்தனர், ஆனால் பஞ்சாப் அணியை அவர்களால் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

 

 

Previous articleIPL ல் இணைந்துள்ள இலங்கையின் வியாஸ்காந்த்…!
Next articleICC Worldcup 2027 -ODI உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ இடங்கள்..!