#IREvAFG டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான் முன்னிலை..!

ஜியா உர் ரஹ்மானின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிடியின் ஆட்டமிழக்காத அரைசதத்தினால் இன்று (29) சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஆப்கானிஸ்தான் அணி முன்னிலைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 134  எடுத்துள்ளது.

அதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்சில் 26 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
ஷாஹிதி 53 , ரஹ்மானுல்லா குர்பாஸ் 23  ஆட்டமிழக்காமல் உள்ளனர். நூர் அலி சத்ரன் 32  பெற்றார்.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணி 263  குவித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி பெற்ற 155 ஓட்டங்களுக்கு பதிலடியாக அது அமைந்தது.

பால் ஸ்டெர்லிங் 52 , கர்டிஸ் கேம்பர் 49 ப பெற்றனர். லோகன் டக்கர் 46 பெற்றார். பந்துவீச்சில் ஜியா உர் ரஹ்மான் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.