லங்கா பிறீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 19 ஆவது போட்டியில் Galle Gladiators அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
Galle Gladiators அணி சார்பில் Bhanuka Rajapaksa 23 ஓட்டங்களையும், Danushka Gunathilaka 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
Jaffna Kings அணி சார்பில் Shoaib Malik 23 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.