Jaffna Kings அணியின் தலைவர் திசர பெரேரா யாழ்ப்பாண அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியான யாழ் கிங்ஸ் அணியின் முதல் நான்கு கட்டங்களில் கேப்டனாக பணியாற்றினார்.
முதல் மூன்று போட்டிகளிலும் திசர பெரேரா தலைமையிலான Jaffna kings அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதேவேளை, யாழ் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து திலின கண்டம்பியும் விலக தீர்மானித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு LPL போட்டிகள் ஆரம்பமானது முதல் இதுவரை 4 பருவங்களுக்கு யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எல்பிஎல் போட்டிக்காக யாழ் கிங்ஸ் அணி முதன்முறையாக புதிய அணித்தலைவர் மற்றும் புதிய பயிற்சியாளருடன் போட்டியிடவுள்ளது.







