இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
கடந்த வருடம் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக தனஞ்சய டி சில்வா விளையாடியிருந்தார்.
எவ்வாறாயினும், தனஞ்சய டி சில்வா 2020 இல் ஆரம்பமான LPL போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.அந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் பட்டத்தையும் வென்றது.
ஜப்னா கிங்ஸ் அணியில் இருந்து வனிந்து ஹசரங்க வெளியேறியதன் காரணமாக, அந்த அணிக்கு தனஞ்சய டி சில்வாவுக்கு பெரும் பொறுப்பு வழங்கப்படவுள்ளது.
பிளேயர் டிராஃப்டுக்கு முன், ஒரு அணியில் 6 வீரர்கள் இடம் பெறலாம், மேலும் கடந்த ஆண்டு விளையாடிய நான்கு வீரர்களைத் தவிர, அந்தந்த அணி மற்றும் வீரரின் விருப்பத்தின் அடிப்படையில் மற்றொரு அணியிலிருந்து 2 வீரர்களைப் பெற முடியும்.
அந்த முறையிலேயே தனஞ்சய டி சில்வாவை ஜப்னா கிங்ஸ் அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.