KKR அணியில் இணையும் இலங்கையின் சமீர..!

எதிர்வரும் ஐபிஎல் 2024 போட்டியில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்கு பதிலாக 50 லட்சம் ரூபாய்க்கு சமிர KKR அணியில் இணைவார்.

துஷ்மந்த சமீர இதற்கு முன்னர் 2018 மற்றும் 2021 ஐபிஎல் சீசன்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

அவர் கடைசியாக 2022 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

 

 

Previous articleஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை..!
Next article4 வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு..!