KKR க்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் விழுந்த பெருத்த இடி- ஷ்ரேயாஸ் தொடர்பில் கவலையான செய்தி..!

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர், குறைந்தது அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு கிரிக்கெட்டை தவிர்க்க வாய்ப்புள்ளது.

டைம் ஆஃப் இந்தியாவின் ஒரு அறிக்கையின்படி, 28 வயதான வலது கை பேட்டருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் கீழ் முதுகு காயம் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க அறுவை சிகிச்சை செய்யும் தேவை உள்ளது.

அதனால் அவர் முழு ஐபிஎல் 2023க்கும் கிடைக்க மாட்டார், மேலும் ஜூன் 7 முதல் 11 வரை ஓவலில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் அவர் இழக்க நேரிடும்.

இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் கேப்டனாகவும், லெவன் அணியில் முக்கிய வீரராகவும் இருப்பதால் அவர் இல்லாதது KKR அணிக்கு பெரும் அடியாக இருக்கும்.

கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் அவர் ரூ. 12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஐயர் இல்லாத நிலையில், கொல்கத்தா இப்போது 2023 இல் ஐபிஎல்-க்கு புதிய கேப்டனைத் தேட வேண்டியிருக்கும். WTC இறுதிப் போட்டியில் அவர் இல்லாததால், டெஸ்ட் அணியில் KL ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வரலாம் என நம்பப்படுகிறது.

எமது YouTube தளத்திற்கு 👇