KKR அணி மீது கம்பீருக்கு பாசமா? டி20 நாயகனை ஒருநாள் அணியில் சேர்க்காமல் அட்டூழியம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி ஒரிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் தேர்வு செய்து விளையாடுகிறது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெறுவதால் இது இரு அணி வீரர்களுக்கும் நல்ல பயிற்சி களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கேகேஆர் அணிக்காக விளையாடிய ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப் பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது போட்டிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் டி20 இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி இருக்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு சிறந்த டி20 வீரருக்கான விருதை வாங்கிய ஆர்ஸ்தீப் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆர்ஸ்தீப் இந்திய அணிக்காக வெறும் எட்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடுகிறார். இதனால் ஆர்ஸ்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்ஸ்தீப் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அது அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறாத நிலையில் இரண்டாவது போட்டிக்காவது திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்ஷித் ராணாவுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் பத்து நாட்களில் தொடங்கப்பட வேண்டிய நிலையில் ஆர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு தரப்படாமல் இருப்பது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ஹர்ஷித் ராணா கேகேஆர் அணியை சேர்ந்தவர் என்பதால், கம்பீருக்கு சொந்த அணி பாசமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பயிற்சியாளராக கம்பீர் இருந்தபோதுதான் ஹர்ஷித் ராணா ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டார். இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தரப்பட்டு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.