Legend’s Leaque போட்டிகளுக்கு தயாரான இலங்கையின் முன்னாள் வீரர்கள்…!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 10 ம் திகதி இந்தியாவில் தொடங்க உள்ளது.

இந்த ஆண்டு, இலங்கை லெஜண்ட்ஸ், இந்தியா லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜெண்ட்ஸ், வங்கதேச லெஜண்ட்ஸ், நியூசிலாந்து லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

இலங்கை லெஜண்ட் அணியின் தலைவர் திலகரத்ன டில்ஷான் உட்பட பல வீரர்கள் லெஜண்ட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு இலங்கை வந்துள்ளனர்.

போட்டிக்காக இந்தியா செல்வதற்கு முன் கொழும்பில் பல பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதே அவர்களின் நோக்கம் எனவும் அறியவருகின்றது.

புகைப்படங்கள் ?

 

 

 

Previous articleஉலக கிரிக்கெட் அரங்கில் 2 வது வீரராக சாதனை மைல்கல்லை எட்டிய கோலி..!
Next articleஇலங்கை ரசிகர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றிய ஆப்கானிஸ்தான்..!