LPL போட்டிகளின் சாம்பியன்ஸ் Jaffna Stallions அணி நீக்கம் ?
இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளின் நடைமுறைகளை பின்பற்றாததன் விளைவாக நடப்பு சாம்பியனான Jaffna Stallions அணியின் உரிமை நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Colombo Kings மற்றும் Dabulla Viikings அணிகளின் உரிமம் நீக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.
Jaffna Stallions அணியின் உரிமம் நீக்கம் தொடர்பான செய்தியை இந்திய ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.
இந்த மூன்று அணிகளும் உரிமைத்துவம் மாற்றப்பட்டு இம்முறை LPL போட்டிகளில் கலந்து கொள்ளுமா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரைவில் அறிக்கை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.