#LPL போட்டிகளில் காலி அணிக்கு ஒத்துழைப்பு நல்க வருகிறார் மாலிங்க ..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக திகழும் லசித் மாலிங்க அண்மை காலமாக கிரிக்கெட் களத்தில் கால் பதிக்கத் தவறிவருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் தந்தைக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பங்கேற்க முடியாது போன மாலங்க ,இலங்கை தேசிய அணியிலும் அண்மைக்காலமாக விளையாடுவதில்லை.
20 -20 உலக கிண்ண போட்டிகளில் விளையாடுவாரா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் நிலையில், இலங்கையின் LPL போட்டிகளில் மாலிங்க இணையவிருப்பதாக செய்திகள் வெெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு காலி அணிககு தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டும் அது நடக்கவில்லை, ஆனால் இம்முறை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
மாலிங்கா ஒரு கிரிக்கெட் வீரனாக இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற எல்பிஎல் போட்டிகளில் காலி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது.