LPL போட்டிகளுக்கான திகதிகள் வெளியாகியது…!

இலங்கையில் இடம்பெறும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பான விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2 வது LPL தொடர் எதிர்வரும் 30 ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் 22 ம் திகதிவரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 அணிகள் பங்கேற்ற முதலாவது LPL தொடர் கடந்தாண்டு கொரோனா அச்ச நிலைமை காரணமாக ஹம்பாதோட்டை மைதானத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான போட்டிகள் தொடர்பான அடுத்தகட்ட விபரங்கள் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் T20 உலக கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் அதனை இலக்குவைத்து போட்டி திகதிகள் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.