இங்கிலாந்தில் நடைபெறும் Vitality Blast 2024 இன்-கவுண்டி டுவென்டி 20 போட்டியின் கீழ் நாட்டிங்ஹாம்ஷயர் அணி விளையாடிய ஆறு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் இழந்துள்ளார்.
இந்தநிலையில் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
டுவென்டி 20 உலக சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரு வீரரான ஹேல்ஸ் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் அவர் உலகம் முழுவதும் பல லீக்குகளில் விளையாடுவதைக் காணலாம்.
கடந்த மாதம் நாட்டிங்ஹாம்ஷயர் அணியுடன் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்து கொண்டார்.
2024 LPL போட்டி ஜூலை 1 முதல் 21 வரை நடைபெற உள்ளது, மேலும் அந்த போட்டியின் போட்டி அட்டவணை இங்கிலாந்து கவுண்டி டுவென்டி 20 போட்டி மற்றும் அமெரிக்க MLC கிரிக்கெட் போட்டியுடன் மோதுகிறது.
LPL போட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸ் தற்போது புதிதாக இணைந்த காலி மார்வெல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.