இந்த ஆண்டுக்கான LPL போட்டியை டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வருடத்திற்கான போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, எல்பிஎல் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, அதை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இந்த போட்டிகள் டிசம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த தொடரின் போட்டிகளில் திசிர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி சாம்பியனானது.