LPL ல் ஒப்பந்தமானார் பத்தும் நிஸ்ஸங்க…!

எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022ல் விளையாட இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்க கண்டி ஃபால்கன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிஸ்ஸங்க இப்போது இலங்கை T20 அணியின் சகாக்களான வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருடன் கண்டி ஃபால்கன்ஸை பலப்படுத்துவார் என கருதப்படுகிறது.

பத்தும் நிஸ்ஸங்கவை வரவேற்று, கண்டி உரிமையாளரான பர்வேஸ் கான் கூறுகையில், “நிஸ்ஸங்க அணியில் சேர்க்கப்பட்டிருப்பது எங்கள் பேட்டிங்கை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கை டி20 அணியில் அவர் விளையாடிய அனுபவம் அணிக்கு மிகப்பெரிய சொத்தாக அமையும். எல்பிஎல் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் T20 துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரராக பதும் நிஸ்ஸங்க முதலிடத்தில் உள்ளார். தற்போது அவர் 8வது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரிக்கு பதிலாக கண்டி ஃபால்கன்ஸ் அணியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அஹமட் டானியல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக அகமது டேனியல் விளையாடினார்.

இலங்கையின் முதன்மையான உள்நாட்டு T20 போட்டியான லங்கா பிரீமியர் லீக்கின் 3வது பதிப்பு 2022 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகள் RPICS, கொழும்பு மற்றும் MRICS, ஹம்பாந்தோட்டையில் விளையாடப்படும்்என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Previous articleஉலக அணியை கிரிக்கெட் ஆட அழைக்கும் இந்தியா -ஆகஸ்டில் போட்டி..!
Next articleஅவுஸ்ரேலியாவை திணறடித்த இலங்கை- காலியில் கங்காருக்களை காலியாக்கியது..!