LSG உரிமையாளரின் அடாவடித்தனம்…!

பிரபல சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது அனைவராலும் பேசப்பட்ட உண்மை.

20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை SRH பேட்ஸ்மேன்கள் துரத்திய போது  10 ஓவர்களில் வெற்றி பெற்றது சிறப்பு.

எனினும், இந்தப் போட்டியில் தோல்வியடைந்த எல்.எஸ்.ஜி அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மற்ற அணிகள் எவ்வாறு போட்டியிடுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இருப்பினும், போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர்களுக்கும் லோகேஷ் ராகுலுக்கும் இடையே சூடான பரிமாற்றத்தின் காட்சிகளை இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவை மனவருத்தப்படும்படியாக எல்லோராலும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.