Luis Suarez இன் மிக முக்கியமான கோல் லா லிகா பட்டம் வென்றது Atletico Madrid

Luis Suarez இன் மிக முக்கியமான கோல்
லா லிகா பட்டம் வென்றது Atletico Madrid

ஸ்பெயின் இன் உள்ளூர் கால்பந்து போட்டி தொடரான லா லிகா இன்று இறுதி வார போட்டி களுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதி வாரம் வரை நடப்பு பருவகா லா லிகா பட்டம் வெல்லும் அணி எது என்ற கேள்வியுடன் பரபரப்பாக சாம்பியனாகியுள்ளது Atletico மாட்ரிட்.

இறுதி நாளான இன்று Atletico Madrid மற்றும் Real Madrid ரெண்டில் ஒன்று லா லிகா பட்டம் வெல்லும் வாய்ப்பில் களமிறங்கின. Atletico Madrid Valladolid அணிக்கெதிராகவும் Real Madrid Villarreal அணிக்கெதிராகவும் மோதின. Atletico Madrid வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையிலும் Real Madrid தனது போட்டியில் வெற்றி பெற்றாலும் Atletico Madrid அவர்களது போட்டியில் தோல்வி அடைந்தால் கிண்ணம் என்ற நிலையிலும் களமிறங்கின.

போட்டிகளின் முதல் பாதியில் Atletico Madrid மற்றும் Real Madrid இரு அணிகளுமே 0-1 என்ற கோல் கணக்கில் பின் தங்கி இருந்தன. எனினும் இரண்டாம் பாதியில் சுதாகரித்துக் கொண்ட Atletico Madrid 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்று லா லிகா சாம்பியன் ஆக முடி சூடியது. Luis Suarez Atletico Madrid இன் Winning Goal ஐ அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

Barcelona, Real Madrid மற்றும் Atletico Madrid லா லிகா தொடரின் மும்மூர்த்திகளின் 2020/21 பருவகால தொடர்.

இந்த 2020/21 பருவகால லா லிகா போட்டிகள் மெஸ்ஸி லா லிகா கழகமான Barcelona இல் தொடருவாரா அல்லது அப்போது அதிகம் பேசப்பட்ட Manchester City அணியுடன் இணைவாரா என்ற சந்தேக நிலையில் மெஸ்ஸி மற்றும் Barcelona நிர்வாக சட்ட ரீதியான சண்டைகளுடன் ஆரம்பித்தது.

அத்துடன் Luis Suarez ஐ Barcelona விடுவித்ததுடன் அவர் Atletico Madrid இல் இணைந்தார். அவரே Atletico Madrid கிண்ணம் வெல்லவும் காரணமானார்.

Messi இன் சர்ச்சைக்கு மத்தியில் Barcelona மும்மூர்த்திகளுள் ஒன்றாக திகழ்ந்தாலும் பெரும்பாலான வேளைகளில் 3 ஆம் இடத்திலேயே அமர நேர்ந்தது. இறுதியில் 2008 இற்கு பிறகு முதல் முறையாக முதல் ரெண்டு இடங்களுக்கு வெளியே Barcelona தொடரை நிறைவு செய்திருக்கிறது. எனினும் புதிய முகாமையாளர் Koeman இன் கீழ் பல சர்ச்சைகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் Barcelona 3 ஆம் இடத்தில் இந்த சீசன் ஐ முடித்தது சற்று பாராட்டப்பட வேண்டிய விஷயமே அன்றி கொண்டாட்டத்திற்குரியது அல்ல.

Real Madrid Cristiano Ronaldo இன் விலகலுக்கு பின் UCL இல் சாதிக்க தவறினாலும் லா லிகா வில் Barcelona இன் திடமற்ற நிலையை தமக்கு சாதகமாக்கி அந்த முதல் இடத்தை போட்டி இன்றி தக்க வைக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் இம்முறை போட்டுக்கு வந்த Atletico Madrid இரு துருவங்களையும் ஓரங்கட்டியுள்ளது. Real Madrid இரண்டாம் இடம் பிடித்துள்ளது இருந்தும் Barcelona இற்கு முன் என்பது அவர்களின் ஆறுதல்.

Atletico Madrid லா லிகா சாம்பியன் ஆகியுள்ளது என்பதை விட Real Madrid மற்றும் Barcelona சாம்பியன் பட்டத்தை தமக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வைக்க அதை Atletico Madrid கவ்வி பிடித்துள்ளது எனலாம். என்னதான் இம்முறை Atletico Madrid சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் Real Madrid மற்றும் Barcelona, Atletico Madrid கிண்ணம் வெல்வதில் உறுதியாக இருந்தன.

இனி அடுத்த சீசன் இல் Barcelona இல் மெஸ்ஸி இருப்பாரா என்பது A, B, C, D, மேற்கூறிய எதுவும் இல்லை போன்ற ஓர் பல் தேர்வு வினா. அதற்கான விடை ஓரிரு மாதங்களில் தெரியும்.
Real Madrid இலும் சில மாற்றங்கள் அடுத்த சீசன் இல் அமையவுள்ளன. Zidane முகாமையாளராக தொடர மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அத்துடன் Hazard Real Madrid இல் தொடர்வாரா என்பதும் கேள்விக்குறியே.

இனி 2021/22 பருவகால போட்டிகளில் இணையும் வரை காத்திருப்போம்….