மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மஹேல ஜெயவர்த்தன மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை புதிய பொறுப்புக்களை வழங்கி MI க்கு உலகளாவிய கிரிக்கெட் பாரம்பரியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பதவியையும் பொறுப்பையும் உயர்த்தியுள்ளது.
MI #OneFamily இன் விரிவாக்கத்துடன், இப்போது MI எமிரேட்ஸ் (UAE தொடர்) மற்றும் MI கேப் டவுன் (தென் ஆபிரிக்க தொடர்) மும்பை இந்தியன்ஸ் (IPL) ஆகியவை அடங்கும்.
MI ஐ உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் பிராண்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. இதனால் ஆழமான கிரிக்கெட் அறிவைக் கொண்ட இரண்டு MI அங்கத்தினரான மஹேல ஜெயவர்தன மற்றும் ஜாகீர் கான் புதிய பதவி நிலைகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள்.
மஹேல ஜயவர்தன, MI, உலகளாவிய செயல்திறனுக்கான தலைவராக (Global head of performance) நியமிக்கப்பட்டுள்ளார், ஒட்டுமொத்த மூலோபாய திட்டமிடல், மற்றும் MI அமைத்த சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த அணி தலைமை பயிற்சியாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுதல் இவரது பொறுப்பாகும்.
MI இன் கிரிக்கெட் டெவலப்மென்ட்டின் உலகளாவிய தலைவராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் வீரர் மேம்பாட்டிற்கு பொறுப்பேற்பார், திறமைகளை அடையாளம் காணுதல் மற்றும் சீர்ப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்பன இவரது பொறுப்பாகும்.