நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான ஷேன் பாண்ட், ஐபிஎல் போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று பணியாற்றவுள்ளார்.
அதனால் அவருடைய அனுபவம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு உதவியாக இருக்கும் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியுடன் இணைந்து ஷேன் பாண்ட் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்காக 18 டெஸ்டுகள், 82 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் ஷேன் பாண்ட் விளையாடியுள்ளார்.
#ABDH