Old Trafford இல் கோல் மழை
மான்செஸ்டர் யுனைடெட் இமாலய வெற்றி
நேற்றைய தினம் இடம்பெற்ற பிரிமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சவுதாம்ப்ரன் அணிக்கு எதிராக 9-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது.
Old Trafford மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் சார்பாக 7 வீரர்கள் கோல் போட்டதுடன் சவுதாம்ப்ரன் வீரரின் ஓன் கோல் அடங்கலாக 9 கோல்கள் பதிவாகியது.
ஒரே அணியில் 7 வீரர்கள் கோல் போடுவது இது இரண்டாவது முறை ஆகும்.
இவ் வெற்றி பிரிமியர் லீக் வரலாற்றில் பெறப்பட்ட உயர் வெற்றி என்ற சாதனையை சமன் செய்ததது.
முன்னர் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லெஸ்டர் சிட்டி அணிகள் இதே சாதனையை பதிவு செய்திருந்தன. லெஸ்டர் அணி சவுதாம்ப்ரன் அணிக்கு எதிராக இதே போன்ற வெற்றியை 2019 இல் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.