PAK vs WI: மேலும் ஐவருக்கு கொரோனா உறுதி
வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான் அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியிலாவது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ், கைல் மையர்ஸ் ஆகிய 3 வீரர்கள் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 வீரர்கள் உள்பட 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஷாய் ஹோப், அகேல் ஹுசைன், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகிய மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் இந்தச் சுற்றுப்பயணத்தின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது.
ஏற்கெனவே 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள போட்டிகள் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று இதுபற்றி பேசி முடிவெடுக்கவுள்ளார்கள்.
#ABDH