#PAKvAFG_இலங்கையில் இடம்பெறவிருந்த தொடர திடீரென பிற்போடப்பட்டது ..!

இலங்கையில் இடம்பெறவிருந்த தொடர திடீரென பிற்போடப்பட்டது ..!

இலங்கையில் இடம்பெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான தொடர் பிற்போடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இடம்பெறுவதாக இருந்த இந்த தொடர் பாகிஸ்தானுக்கு மாற்றப்படுவதாக செய்திகள் தெரிவித்தன , ஆயினும் நள்ளிரவு வேளையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தொடர் 2022ஆம் ஆண்டுக்குப் பிற்போடப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி அவர்கள் ESPNcricinfo விற்கு இந்தத் தொடரை பாகிஸ்தானுக்கு மாற்ற முயற்சித்ததை உறுதிப்படுத்தினார், ஆனால் இறுதியில் ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால்் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், கொரோனா அச்ச நிலமைகளுமே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

Previous articleவிறுவிறுப்பான கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு..!
Next articleகபில் தேவின் 41 ஆண்டுகால சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ..!