பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய நாளில் தமது 2 வது இன்னிங்சில் ஆடிய தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆடுகளத்தில் கேஷவ் மஹாராஜ் மற்றும் அணித்தலைவர் குயின்டன் டி கோக் ஆகியோர் உள்ளனர்.
தென் ஆபிரிக்க அணி அணி இறுதி 12 ஓட்டங்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.
முன்னதாக தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 220 ஓட்டங்களையும், பாவாட் அலாமின் சதத்தின் துணையுடன் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.
பாகிஸ்தானை விடவும் 29 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா, நாளை 4 ம் நாளில் இன்னும் எத்தனை ஓட்டங்களை பெறப்போகிறது என்று ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
14 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து தென் ஆப்பிரிக்கா விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 200 டெஸ்ட் விக்கெட்கள் எனும் மைல்கல்லை எட்டியமையும் முக்கியமானது.