#PAKvSA-விறுப்பான முடிவை நோக்கி நகரும் பாகிஸ்தான், தென் ஆபிரிக்க டெஸ்ட் போட்டி.

தென் ஆபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ம் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இரு அணிகளும் குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இந்த போட்டி இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை சுவாரஸ்யமாகும்.

தென் ஆபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ம் டெஸ்ட் போட்டியின் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி கடந்த போட்டியைப் போன்றே ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்தாலும், பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இணைந்து நேற்றைய நாளில் நம்பிக்கை ஊட்டினார்.

ஆரம்ப 3 விக்கெட்களும் 22 ஓட்டங்களுக்கு இழக்கப்பட 4 வது விக்கெட்டில் பாவாட் அலாம் மற்றும் அணித்தலைவர் பாபர் அசாம் இருவருமாக வீழ்த்தப்படாத 123 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

முதல் நாள் நிறைவில் மழையால் ஆட்டம் நிறுத்தப்படும்வரை பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.
களத்தில் பாபர் அசாம் 74 ஓட்டங்களுடனும் பாவாட் அலாம் 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காது இருந்தனர் .

நேற்றைய 2 ம் நாள் ஆட்டம் தொடர்ந்த வேளை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 77 ஓட்டங்களுடனும் பாவாட் அலாம் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தாலும் சகலதுறை வீரர் பாகிம் அஷ்ரப் ஆட்டம் இழக்காது 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.அண்ரிச் நோர்கியா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு நேற்று ஆடிய தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது. இன்று 3 ம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் தென் ஆபிரிக்க அணி சகல விக்கெட்களையும் இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

ஹசன் அலி 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது 2 வது இன்னிங்சில் ஆடும் பாகிஸ்தான் அணி இன்றைய நாள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 129 இழந்துள்ளது.களத்தில் ஹசன் அலி மற்றும் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர்.

3 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவை விடவும் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

நாளை போட்டியின் 4 ம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.