#PAKvSA-ஹசன் அலியின் அசத்தல் பந்துவீச்சில் அபார வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்றுவரும 2வது டெஸ்ட் போட்டியில் 2ம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 298 ஓட்டங்களுக்கு நேற்று ஆட்டமிழந்தது.

இதன்மூலம் 370 எனும் வெற்றி இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய ஆட்டம் நிறைவுக்கு வருகின்றபோது தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது .

போட்டியின் இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு இன்னும் 9 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க 243 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.

மார்க்ரம், பவுமா ஜோடி அற்புதாமான் இணைப்பாட்டம் புரிந்து பாகிஸ்தானுக்கு பலத்த நெருக்கடி கொடுத்த நிலையில் ஹசன் அலி அடுத்தடுத்து மார்க்ரம், குயிண்டன் டி கோக் ஆகியோரை விரைவாக ஆட்டமிழக்க செய்தார்.

82 வது ஓவரை வீசிய ஹசன் அலி, அடுத்தடுத்த பந்துகளில் இருவரையும் ஆட்டமிழக்க செய்ய போட்டியின் போக்கு பாகிஸ்தானுக்கு சாதகமானது.

அதன் பின்னர் விரைவாக விக்கெட்களை இழந்த தென் ஆபிரிக்க அணி ,274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் பறிகொடுத்தது.
மார்க்ரம் 108 ஓட்டங்களையும், பாவுமா 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஹசன் அலி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களை கைப்பற்றியவர் இந்த இன்னிங்சிலும் 5 விக்கெட்களை பதம்பார்த்தார்.

இறுதியில் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போட்டியை வென்று தொடரை 2-1 என்று தனதாக்கியது.

18 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றியை பெற்றிருப்பதுடன் , தலைவராக பாபர் அசாம் பங்கேற்ற முதல் தொடரிலேயே வெற்றியும் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயாகனாக ஹசன் அலியும், தொடர் நாயகனாக விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஷ்வானும் தேர்வாகினர்.