ஐபிஎல் 2021 சீசனின் 14 வது பதிப்பின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் (DC), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகள் Play Off சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துடன் லீக் சுற்றை முடித்தது, சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு தரப்பினரும் அக்டோபர் 10 ஆம் திகதி டுபாயில் நடக்கும் குவாலிபயர் 1 ல் ஒருவருக்கொருவர் எதிர்கொள்கின்றனர்.
டெல்லி இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கேவை வென்றது, இறுதி 4 போட்டிகளிலும் டெல்லி அணியே வென்றுள்ளது.
மறுபுறம் ஆர்சிபி அக்டோபர் 11 அன்று ஷார்ஜாவில் எலிமினேட்டரில் கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இரு தரப்பினரும் இம்முறை ஒவ்வொரு வெற்றி பெற்றனர்.
13ஆம் திகதி இரண்டாவது குவாலிபயர் ஆட்டமும் 15 ஆம் திகதி 14வது ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் மிகச்சிறப்பாக இறுதிப் பந்தில் சிக்சர் அடித்து ஆர்சிபி டெல்லியை தோற்கடித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.