PSG கழகத்திலிருந்து விலகும் மெஸ்ஸி | சவுதியில் $ 400 மில்லியன் ஒப்பந்தம்..!
#Messi #PSG #Saudiarabia #Football
பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸிக்கு இரண்டு வார போட்டி தடையை அவரது சொந்த கழகமான PAG கழகம் விதித்திருக்கிறது.
அனுமதி இன்றிய இரண்டுவார கால சவுதி அரேபிய சுற்றுப்பயணமே இதற்கான காரணம் என PSG குறிப்பிட்டு இருக்கிறது.
எவ்வாறாயினும் PSG கழகத்துடன் Messi தொடர்ந்து விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இந்த வருட இறுதியோடு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள உள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
பிந்திய தகவல்களின்படி சவுதி ப்ரோ லீக் போட்டிகளிலே அல் நசார் கழகத்தோடு மெஸ்ஸி இணையப் போகிறார் எனவும், 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம் பேசப்படுவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் இந்த போட்டிகளில் விளையாடி வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.