PSL போட்டிகளில் அதிரடியில் மிரட்டும் பஹார் சமான்-T20 உலக்கிண்ணத்தில் வேட்டைதான்..!

PSL போட்டிகளில் அதிரடியில் மிரட்டும் பஹார் சமான்..!

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் Lahore Qalandars அணிக்காக விளையாடும் பஹார் சமான் ஓட்டமழை பொழிந்து வருகின்றார்.

T20 உலக கிண்ண போட்டிகளும் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் பஹார் சமான் அதிரடியில் மிரட்டி கொண்டிருக்கின்றமை அந்தநாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 173 எனும் ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதம் 3 அரைசதம் அடங்கலாக மொத்தமாக 356 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

ஓட்ட விபரம்.

76 (35)
106 (60)
66 (38)
38 (27)
70 (45)

356 ஓட்டங்கள்
சராசரி-71.2,
SR: 173.65