RCB யின் அசத்தல் ஆட்டம்..!

ஒரு பைனலில் எப்படி ஆட வேண்டும் என்று Qualifier 1 லயே ஆடி காட்டிட்டாங்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 🔥

பஞ்சாப் மைதானத்தை எதிரணி மைதானம்’ன்னு நினைக்காம, தங்களோட மைதானமா நினைச்சு விளையாடிய அவங்களோட Approach பாராட்ட வேண்டியது…

பஞ்சாப் பேட்டர்ஸ்க்கு கொஞ்சம் கூட யோசிக்க இடம் கொடுக்காம, ஏன் நிற்க கூட விடாம வந்த வேகத்துலயே திருப்பி அனுப்பி வெச்சாங்க பெங்களூர் பவுலர்கள்! அதுதான் மேட்டரே!

என்னை கேட்டா ஹேசில்வுட் எடுத்த அந்த ரெண்டு விக்கெட்டும் தரம் தரம் தரம் 🔥
ஏன்னா அவங்க ரெண்டு பேரும் Dangerous Batters! ஒரு‌ ரெண்டு மூணு ஓவர் நின்னு ஆடி இருந்தாங்கன்னா மேட்ச் வேறு விதமாக போய் இருக்கும்!

ஆனா அதுக்கு எல்லாம் ஹேசில்வுட் இடமே தரலை! அங்கதான்யா நிற்கிறான் அவன்! ஆகச்சிறந்த பவுலிங் போட்டான்!

வழக்கமா சுயாஷ் சர்மா லீக் போட்டிகளில் அவ்வளவாக ஒன்றும் பிரமாதமா பவுலிங் போடவில்லை! வந்து போட்டாவே அடிச்சு எறிஞ்சாங்க!

ஆனா சுயாஷ் நேத்து பவுலிங் வேற மாதிரி இருந்துச்சு! என்னன்னு யோசிக்கிறதுக்குள்ளயே பந்து ஸ்டைம்பை நோக்கி போயிருச்சு! அதுதான் நேற்றைய போட்டியில் மேஜிக் ஆக இருந்துச்சு 🙇

நேற்றைய போட்டியில் பவுலிங்கால தான் வெற்றியை பெற்று இருக்காங்க 👏 இந்த மாதிரி பவுலிங் இருந்தா எந்த பிட்ச்ல கூட போய் ஆடலாம்! ஆனா அங்க தான் சவாலே…

ஏன்னா பைனல் ஆமதாபாத்ல நடக்குது! அங்க பிட்ச்சோட கண்டிஷனே வேற! கிட்டத்தட்ட பேட்டர்களுக்கு சாதகமா இருக்கும் 💯 அங்க இவங்க எப்படி பவுலிங் போட போறாங்க ன்னு பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்!

அப்புறம் இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க! அரசன் கோலி மத்த மேட்ச் எல்லாம் செமயா ஆடுவாரு! ஆனால்,

ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் அவ்வளவாக ஆடியதில்லை! லீக் போட்டிகளில் பிரமாதப்படுத்தும் விராட் கோலி ப்ளே ஆஃப் எனப்படும் நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவது கடந்த கால வாடிக்கையாகும்!

இதற்கு நேற்றைய போட்டி ஒரு உதாரணம்!

ஐபிஎல் வரலாற்றில் கோலி ப்ளே ஆஃப்பில் அடித்த ரன்கள் 👇👇👇

போட்டிகள் : 15
ரன்கள் : 341
சராசரி : 26.23
ஸ்ட்ரைக் ரேட் : 121.78
அதிகபட்சம் : 70

இருந்தாலும் இந்த இறுதிப்போட்டியில் விராட் கோலி அசத்தும் பட்சத்தில் கோப்பை அவரது கையில் தவழும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை 💯

விராட் கோலியால் முடியாதது, ரஜத் படிதாரால் முடியாதது, ஜிதேஷ் சர்மாவால் முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 🙋

#rcb #viratkohli #ipl2025 #ipl #cricketfans #cricketlovers

✍️ Sathiya kumaran

Previous articleIPL 2025 பிளே ஆஃப்: எந்தெந்த அணிகள் மோதல்? முழு அட்டவணை, தேதி, அணி விவரம்
Next articleமுஷீர் கானை பார்த்து கோலி சொன்ன சர்ச்சை வார்த்தை.. விளாசும் ரசிகர்கள்..உண்மை என்ன?