RCB யின் வாய்ப்பு கேள்விக்குறி – பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி புள்ளிப்பட்டியலில் 4 வது இடம்…!

டெல்லியிடம் 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி ..!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது.

இதற்கிடையில், போட்டியின் 64 வது போட்டியில்  17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இன்று டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். சர்பராஸ் கான் 32 ரன்களும், லலித் யாதவ் 22 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

160 என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஜிதேஷ் ஷர்மா அதிகபட்சமாக 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார், ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் டெல்லி சார்பாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு Play off க்கான வாய்ப்பை நழுவ்விடுகிறது.

புள்ளிப்பட்டியலில் RCB அணியை பின்தள்ளி டெல்லி அணி 4 வது இடத்தை தனதாக்கியது.

? IPL


YouTube Link ?