RCB வெற்றி – இன்னும் கேள்விக்குறியில் RCB யின் play off வாய்ப்பு..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிப் போட்டியை நெருங்கி வருகிறது.

இதேவேளை, இன்று நடைபெற்ற தொடரின் 67வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.

டேவிட் மில்லர் 34, விருத்திமான் சாஹா 31  பெற்றனர். பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 73 ரன்கள் குவித்தார்.

ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார். கிளென் மேக்ஸ்வெல் விரைவாக 40 பெற்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வெற்றி மூலமாக play off போட்டியில் காணப்படைகின்றது

குஜராத் டைட்டன்ஸ் ,லக்னோ , ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இதுவரை play off உறுதிப்படுத்தியுள்ளன, நான்காவது அணியாக டெல்லி கேப்பிடல்ஸ், RCB அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகிறது.

சனிக்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்கும் ஆக இருந்தால் நான்காவது அணியாக நிகர ஓட்ட சராசரி அடிப்படையில் ஆர்சிபி அணியை பின்தள்ளிவிட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

.you Tube Link link ?