RCB அணியில் இப்போது உள்ள வெளிநாட்டு வீர்ர்கள் விபரம் – ஹசரங்கவும் , சமீரவும் பிளேயிங் XI இல் இடம்பெறவும் வாய்ப்பு ?

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சில வீரர்கள் விலகியதன் காரணத்தால் இலங்கையின் இரண்டு வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன் அடிப்படையில் விலகிய , மற்றும் இணைக்கப்பட்ட வீரர்கள் விபரம் வருமாறு.

 

விலகும் வீரர்கள் ??

 நியூசிலாந்தின் பின் அலன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் சம்ஸ், நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குக்லிஜென் ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக எஞ்சிய ஐபிஎல் தொடரின் பெங்களூர் அணியில் இருந்து விலகியுள்ளார்கள்.

புதிதாக சேர்கப்பட்ட வீரர்கள் ??

ஹசரங்க, துஸ்மந்த சமீர, டிம் டேவிட்

? இந்த புதிய அறிவிப்புகளின் படி பெங்களூர் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் விபரம் இதோ :

ஏபி டிவிலியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல், வணிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீரா, டிம் டேவிட் ,டானியல் கிறிஸ்டியன், கையில் ஜமிசன்.