RCB ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுக்கும் மேக்ஸ்வெல்- ஏன் தெரியுமா ?

RCB ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுக்கும் மேக்ஸ்வெல்- ஏன் தெரியுமா ?

RCB பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல் நேற்றிரவு KKR க்கு எதிரான RCB ஆட்டத்திற்குப் பிறகு சில ரசிகர்களின் தவறான நடத்தை குறித்து தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக தனது சகாவான டேனியல் கிறிஸ்டியன் போட்டியில் வெளிப்படுத்திய பின்னடைவு காரணமாக சமூக வலைத்தளங்களில் அவரும் அவரது மனைவியும் குறிவைக்கப்படுவதாகவும், தனது கூட்டாளியை அதில் இருந்து விலக்குமாறு ரசிகர்களிடம் மேக்ஸ்வெல் கேட்டுக் கொண்டார்.

பேட்டியில் நிறைய ரன்கள் எடுக்க முடியவில்லை என்பதால் கிறிஸ்டியனுக்கு நேற்றிரவு சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. அவரது ஓவரில் சுனில் நரேன் 3 சிக்ஸர்களையும் தெறிக்க விட்டார்.

இதன்பின்னர் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள், சில சிறப்பான ஓவர்கள் மூலம் அணியை மீண்டும் போராட்ட நிலைக்கு கொண்டுவந்தனர், ஆனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே KKR இந்த வெற்றிக்கு தேவையாக இருந்தன, அந்த கடைசி ஓவரை மீண்டும் வீசிய கிறிஸ்டியன் முதல் பந்திலேயே பவுண்டரியை விட்டார். இதனால் ஆர்சிபி இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டத்தை இழந்தது.

இந்தநிலையிலேயே தனது சகா சமூக வலைத்தளங்களில் குறிவைத்து இம்சிக்கப்படுவதை தவிர்க்குமாறு மேக்ஸ்வெல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஉலக கிண்ண அணியோடு பயணிக்கப்போகிறார் வெங்கடேஷ் ஐயர்..?
Next articleதோனியின் சம்பளத்தில் கைவைத்த சஞ்சீவ் குப்தா- நெத்தியடி முடிவை அறிவித்த BCCI ,