RCB வரலாற்றில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான ஹசரங்க …!

RCB வரலாற்றில் புதிய சாதனைக்கு சொந்தக்காரரான ஹசரங்க …!

15வது ஐபிஎல் தொடர் இந்தியாவிலே விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது, இன்று இடம்பெற்ற 54வது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

RCB அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்க 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹாலுக்கு அடுத்ததாக ஹசரங்க தன்னுடைய பெயரை பதிவு செய்தார் .

 

இது மாத்திரமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் RCB அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் தனதாக்கி இருந்தார்.

ஸ்டார்க், வாட்சன் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .