Revenge-ன்னா இப்படித் தான் இருக்கணும்! எங்கே அவமானப்பட்டமோ அங்க அதே இடத்துல அவங்க முன்னாடி நின்னு ஜெயிச்சு காட்டணும்! அதுதான் ஜெயிக்கிறவங்களுக்கு மன திருப்தியை தரும் 😊 அது இன்னைக்கு லோகேஷ் ராகுலுக்கு கிடைச்சிருக்கும்ன்னு நம்புறேன் 💯🤷
போன சீசன்ல LSG டீம்க்கு தலைமையேற்று சில தோல்விகளால் அந்த அணி ஓனர்கிட்ட லோகேஷ் ராகுல் அவமானப்பட்டதை நாம் பார்த்தோம்! அந்த சீசனோடு அந்த அணியிலிருந்து வெளியேறினான் ராகுல்!
ஏலத்தில் டெல்லிக்கு தேர்வாகி அங்கு நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் தான் விளையாடுவேன், அணிக்கு தலைமை ஏற்க மாட்டேன்னு என்று பிடிவாதமாக இருந்தான் லோகேஷ் ராகுல்!
சொன்னபடியே பேட்டிங்கில் மட்டுமே கோலோச்சி வருகிறான்! சென்னை, பெங்களூர் என்று அவன் ஆடாத ஆட்டமே இல்லை! ஆட்டநாயகனாக மிளிர்ந்தான்!
அன்று அதிலும் பெங்களூரில், இது என் இடம், இங்கு நான்தான் எல்லாமே ன்னு அவன் Celebrate பண்ணின விதம் பார்க்க அவ்வளவு அருமையாக இருந்தது!
இதோ இன்று லோகேஷ் ராகுலோட ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த போட்டி நடந்தது! LSG-க்கு எதிராக லக்னோ மைதானத்தில் ராகுல் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்! அதுவும் இன்று நடந்தது!
ஆம் எந்த அணியிலிருந்து அவமானப்பட்டு வெளியேறினானோ, இன்று அந்த அணிக்கு எதிராக அரைசதத்தை அடித்து ” நான் மற்றவர்களின் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவன் என்று நிரூபித்திருக்கிறான் ராகுல் 😎
தான் அணிந்திருக்கும் பனியனில் மட்டுமல்ல டெல்லி அணியிலும் நான்தான் நம்பர் 1 என்று LSG நிர்வாகத்திற்கு ஒரு Statement கொடுத்திருக்கிறான்
லோகேஷ் ராகுல் 💪
அதோடு ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக ஐந்து ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறான் லோகேஷ் ராகுல்!
130 இன்னிங்ஸில் விளையாடி இந்த மைல்கல்லை அடைந்திருக்கிறான் ராகுல்! இதற்கு முன்பு டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸில் விளையாடி ஐந்து ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார்!
லோகேஷ் ராகுல் தன்னுடைய ஹேட்டர்ஸ்களை கூலாக Handle செய்து விட்டு போய் விடுகிறான் இனிமேல் வச்சுக்காதீங்க என்கிட்ட வம்பு என்று 🫰
#klrahul #DCvsLSG #dcvslsg2025 #ipl2025 #ipl #cricketfans #cricketlovers
✍️ Sathiya kumaran