#SAvBAN-தென் ஆபிரிக்க மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது பங்களாதேஷ்…!

தென் ஆபிரிக்க மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது பங்களாதேஷ்…!

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரை பங்களாதேஷ் வெற்றிகொண்டு வரலாறு படைத்துள்ளது.

முதல் போட்டியில் பங்களாதேஷ் 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது, 2 வது போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில் தொடரை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி 154 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது, பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.

வரலாற்றில் முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவை அவர்கள் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி ,இப்போது தொடரையே வென்று சாதனை நிலைநாட்டியுள்ளது.

முன்னதாக இந்தியாவை 3-0 என வெற்றிகொண்ட தென் ஆபிரிக்க அணி பங்களாதேஷிடம் தொடரை இழந்துள்ளமை ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.