#SAvSL மகளிர் போட்டி மழையால் பாதிப்பு…!

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையால் முடிவு இன்றி முடிவடைந்த நிலையில், தஸ்மின் பிரிட்ஸின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச சதம் வீணானது.

கிழக்கு லண்டனில் நடைபெற்ற போட்டியின் தொடக்கமும் மைதானத்தின் ஈரமான நிலையில் தாமதமானது, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வீரர்கள் இலங்கைக்கு 271 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொடுத்தனர்.

எனினும், மழையுடன் மோசமான வானிலையால் போட்டி பாதிக்கப்பட்டதால் இலங்கையின் இன்னிங்ஸ் வெறும் 6.5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அப்போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 23  எடுத்திருந்தது. சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் அழைப்பின் பேரில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களைப் பெற்றது.

டாஸ்மின் பிரிட்ஸ் 128 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ஒஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, கவீஷா தில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரு நாடுகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி கிம்பர்லியில் நடைபெற உள்ளது.