SENA எனப்படும் வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்டவர்கள் – கோலி முதலிடம்..!

SENA எனப்படும் வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்டவர்கள் – கோலி முதலிடம்..!

SENA எனப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவராக கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

SENA எனப்படும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது  ஆசிய நாட்டுத் தலைவர்களுக்கு குதிரைக் கொம்பான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.

ஆனால் மேற்குறித்த SENA நாடுகளில் ( தென் ஆப்பிரிக்கா -S, இங்கிலாந்து-E, நியூசிலாந்து-N, மற்றும் அவுஸ்திரேலியா-A ) மொத்தம் ஐந்து டெஸ்ட் வெற்றி பெற்று ஆச்சரியமளித்து வருகிறார் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் மியான்டட் இருந்த நிலையில் விராட் கோலி இறுதியாக   லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்றுக் கொண்டு வெற்றி 5வது டெஸ்ட் வெற்றியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தோனி மூன்று டெஸ்ட் வெற்றிகளை இந்த மண்ணிலே பெற்றுக் கொண்டமையும் நினைவு படுத்ததக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்று இன்னும் அதீத சாதனைகள் படைக்கும வாய்ப்பு கோலிக்கு காத்திருக்கிறது என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.