இலங்கை கிரிக்கெட் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது- தென்னாபிரிக்காவுடனான தொடரையும் வெற்றியோடு ஆரம்பித்தது.
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம் பெற்று வருகின்றது.
முதலாவது போட்டி இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்கு பெருத்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
அண்மைக்காலமாக இலங்கை அணி எதிர்கொண்டுவரும் மோசமான தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்தியம்பியிருக்கிறது.
ஏற்கனவே பலம் பொருந்திய இந்திய அணியுடனான தொடரில் இலங்கையினுடைய திறமை வெளிப்பாடுகள் நம்பிக்கை கொடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுடனான தொடரிலும் இலங்கையின் மிகச் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
போட்டியில் அவிஷ்க பெர்னான்டோ சதம் அடிக்க அசலங்க, தனஞ்சய டீ சில்வா அதிரடி ஆட்டம் கைகொடுக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 301 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தாலும் துஷ்மந்த சமீர ,ஹசரங்க, அகில தனஞ்சய அதேபோல் சாமிக கருணாரத்ன ஆகியோரின் பந்துவீச்சு இலங்கைக்கு அற்புதமான வெற்றியை பரிசளித்திருக்கிறது.
14 நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரில் 1_0 என முன்னிலை வகிக்கிறது.