SLC Invitational தொடரின் சாம்பியனானது குசல் மென்டிஷின் ரெட்ஸ் அணி…!

இறுதிப் போட்டியில் ப்ளூஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி SLC invitational மகுடத்தை வென்றது.

எதிர்வரும் ஆசியக் கிண்ண மற்றும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த invitational  டுவென்டி 20 போட்டியின் இறுதிப் போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான ரெட்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதன்படி, ப்ளூஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த போட்டியிலும் புளூஸ் அணித்தலைவர் சரித் அசங்க விளையாடவில்லை அதனால் தனஞ்சய சில்வா தலைவராக இருந்தார்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரெட்ஸ் அணித்தலைவர் குசல் மென்டிஸ் புளூஸ் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். அதன்படி, ப்ளூஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுக்க முடிந்தது.

 

புளூஸ் அணியின் அதிகபட்ச ஓட்டமாக அஷேன் பண்டார 30 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற முடிந்தது. லஹிரு உதார 37 ஓட்டங்களையும், தனஞ்சய சில்வா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மகிஷ் தீக்ஷன மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்படி, 137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ரெட்ஸ் அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

ரெட்ஸ் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், லசித் கிருஸ்புல்லே 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரவீன் ஜெயவிக்ரம இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது குசல் மெண்டிஸுக்கு கிடைத்தது.

? #SLCT20லீக் சிறப்பு விருதுகள் ?

? சாம்பியன்கள் – SLC ரெட்ஸ்


?ரன்னர் அப் – SLC ப்ளூஸ்

?️️ தொடர் நாயகன் – அசித்த பெர்னாண்டோ


?️️ சிறந்த பேட்ஸ்மேன் – குசல் மெண்டிஸ்


?️️ சிறந்த பந்து வீச்சாளர் – பிரவீன் ஜெயவிக்ரம


?️️ இறுதி போட்டி ஆட்டக்காரர் – குசல் மெண்டிஸ்

 

 

 

Previous articleரணதுங்கவிற்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்…!
Next articleஃபிளமிங் தலைமை பயிற்சியில் தென் ஆபிரிக்காவின் சூப்பர் கிங்ஸ் அணி, ஒப்பந்தமான வீரர்கள் விபரம்…!