தமிழ் யூனியன் 2022 #SLCMajorClubs Limited ஓவர் பட்டத்தை வென்றது! ?
ஶ்ரீலங்கா கிரிக்கட் ஏற்பாடு செய்து நடத்திய இலங்கையின் கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டி தொடரின் சாம்பியன்களாக தனஞ்செய டி சில்வா தலைமையிலான தமிழ் யூனியன் அணி தேர்வானது.
இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் மற்றும் இராணுவ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய இராணுவ அணி 49.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அசேல குணரத்ன அதிகபட்சமாக 59, மகேஷ் குமார 57, பந்துவீச்சில் சந்துஷ் குணதிலகே 3/14, இசுரு உதான 3/31 ஆகியோர் விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பதிலுக்கு 199 எனும் இலக்குடன் களமாடிய தமிழ் யூனியன் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 31.2 ஓவர்களில் வெற்றிபெற்றது.
சதீர சமரவிக்ரம 58*, தில்ருவான் பெரேரா 37, நவோத் பரணவிதான 32 ஓட்டங்கள் குவித்தனர், அசங்க மனோஜ் 2/27 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியில் தமிழ் யூனியன் 34 பந்துகள் மீதமுள்ள நிலையில் D/L முறைமூலமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று SLC மேஜர் கிளப்ஸ் லிமிடெட் ஓவர் தொடரின் சாம்பியனானது.
SLC மேஜர் கிளப்ஸ் லிமிடெட் ஓவர் தொடர்- விருதுகள் .
சாம்பியன்கள் – தமிழ் யூனியன் ?
இரண்டாம் இடம் – இராணுவ விளையாட்டு கழகம்?
போட்டியின் சிறந்த வீரர் – ஜனித் லியனகே ?️
சிறந்த பேட்ஸ்மேன் – கசுன் விதுரா ?️
சிறந்த பந்து வீச்சாளர் – துவிந்து திலகரத்ன ?️
இறுதிப் போட்டியின் வீரர் – சதீர சமரவிக்ரம ?️
#SLCMajorClubs #SLCDomestic