#SLvAFG போட்டிக்குப் பின்னர் ஹசரங்க தெரிவித்த கருத்து..!

வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது மிகவும் பொருத்தமானது என இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிது ஹசரங்க தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில், பாதும் நிஸ்ஸங்கவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, 30 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இது இலங்கை அணி தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த காயம் காரணமாக, எதிர்வரும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் பாத்தும் நிஸ்ஸங்கவின் பங்குபற்றுதலும் அபாயத்தில் உள்ளது.

போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வனிது, 12 நாட்களுக்குள் இலங்கை அணி 6 போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்கு மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார்.

ஒரு போட்டியில் விளையாடிய பின்னர் 24 மணி நேர ஓய்வுக்குப் பிறகு மற்றொரு போட்டியை விளையாடுவது மிகவும் கடினம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நேற்றைய போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் 11 வைட் ஓட்டங்களை வழங்கியிருந்த நிலையில், மொத்த மேலதிக ஓட்டங்கள் 21 ஆக பதிவாகியிருந்தன.

சர்வதேச போட்டியில் இவ்வாறான தவறுகளை செய்ய முடியாது என வனிது ஹசரங்க தெரிவித்துள்ளார்.