இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்களையும், ஹஸ்ரத்துல்லா சசாய் 45 ஓட்டங்களையும், அகில தனஞ்சய 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மத்திஷ பத்திரன 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.
பதம் நிஸ்ஸங்க 60 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும், மொஹமட் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
கடைசி ஓவரில் கமிந்து மெண்டிஸ் விளையாடி கொண்டிருந்த போது No ball கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.