SLvAUS கிரிக்கெட் தொடர் – டிக்கெட்டுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் மொஹான் டி சில்வா ..!

“பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவில்லை, டிக்கெட் விலையையும் குறைத்தோம்” –

அவுஸ்திரேலியா-இலங்கை போட்டி தொடர்பாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா விசேட அறிவிப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை குறைந்த மட்டத்தில் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான தெரணவின் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

போட்டிகள் இன்னும் 5 நாட்களில் ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டிக்கான டிக்கெட்டுகள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் டிக்கெட் கவுன்டர் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இம்முறை மைதானங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, “கொவிட் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதை இப்போது அறிகிறோம். எனவே பார்வையாளர்களுக்கு நாங்கள்  திறந்திருக்கிறோம்.

4ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும். இலங்கை கிரிக்கெட்டில் டிக்கெட் கவுன்டர் உள்ளது. மேலும், ஆன்லைன் விற்பனை வரும் 4ம் தேதி ஆரம்பிக்கும் எனவும் கூறினார்.

பார்வையாளர்களின் எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை. டிக்கெட் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற ஒரு டீம் இலங்கை சுற்றுலா வரும்போது நிறையப் பணத்துக்குப் போகணும்னு நிஜமாவே எதிர்பார்த்தோம்.

ஆனால் C மற்றும் D ஸ்டாண்டுகளில் நான்கு போட்டிகள் இருக்கும் 300 ரூபாய் வசூலிக்கிறோம். மேலும் பல்லேகலையில் 500 ரூபாய்தான் என நினைக்கிறேன். A மற்றும் B அப்பர் ரூ.3000 அல்லது ரூ.3500 வரை செல்கிறது.

B lower 2500 அப்படித்தான் விலை நிர்ணயம் செய்தோம். இம்முறை குறைப்பு உள்ளது. நாங்கள் அதிகரிக்க விரும்புகிறோம், ஆனால் நாட்டின் நிலைமை மற்றும் மக்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அந்த முடிவை எடுத்துள்ளோம்.

இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியின் முதற்கட்ட போட்டிகள் ஆர் பிரேமதாச மைதானத்திலும் பின்னர் பல்லக்கலே மற்றும் காலி சர்வதேச மைதானங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.