தொடரை இலகுவாய் வென்றது அவுஸ்திரேலியா…!
அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலிய அணி இலகுவாய் வென்றுள்ளது.
இன்றைய 3 வது T20 போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலமாக அந்த அணி 2 போட்டி மீதமுள்ள நிலையிலேயே 3_0 என தொடரை தனதாக்கியது.
இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 121 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அணித்தலைவர் தசுன் சானக ஆட்டம் இழக்காது 39 ஓட்டங்களையும், சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு 132 என்ற இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் இலகுவாய் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. மக்ஸ்வெல் 39 ஓட்டங்களையும், பின்ச் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் பந்துவீச்சில் தீக்ஷண 3 விக்கெட்டுக்களை பெற்றார்,