இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி பலமான நிலையை எட்டியுள்ளது.
இன்றைய 2 ம் நாள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 469 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நேற்றைய நாளில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களை பெற்று அட்டமிழந்தாலும், ஆரம்ப வீரர் லஹிரு திரிமான்ன ஆட்டம் இழக்காது 131 ஓட்டங்களை பெற்றதுடன், ஒஷாத பெர்னாண்டோ ஆட்டம் இழக்காது 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் இன்றைய ஆட்டம் தொடர்ந்த நிலையில் திரிமான்ன 140 ஓட்டங்களை பெற்றதுடன், ஒஷாத பெர்னாண்டோ 81 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
ஆடுகளத்தில் ஆட்டம் இழக்காது விக்கெட் காப்பாளர் டிக்வெல்ல 64 ஓட்டங்களுடனும், ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களுடனும் காலத்தில் உள்ளனர்.
நாளை போட்டியின் 3 ம் நாள் தொடரும்.