இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (30) சட்டோகிராமில் ஆரம்பமானது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 314 எடுத்துள்ளது.
தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை இன்னிங்ஸை ஆரம்பித்த திமுத் கருணாரத்னே மற்றும் நிஷான் மதுஷ்கா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் சேர்த்தனர். 57 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மதுஷ்கா ரன் அவுட் ஆனதால் அந்த இணைப்பாட்டம் முறிந்தது.
திமுத் 86 பெற்றார். குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மெண்டிஸின் இன்னிங்ஸில் ஒரு சிக்ஸரும் 11 பவுண்டரிகளும் அடங்கும். ஏஞ்சலோ மேத்யூஸ் 23 மட்டுமே பெற்றார்.
பந்துவீச்சில் இந்தப் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் வென்ற ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.