#SLvBAN தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் இலகு வெற்றி..!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் 255 ரன்கள்  பெற்றது. குசல் மெண்டிஸ் 59 , ஜனித் லியனகே 67 , பாத்தும் நிசங்க 36  பெற்றனர்.

ஷோரிபுல் இஸ்லாம் 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், தன்சிம் ஹசன் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.