பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித காயம் அடைந்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை டெஸ்ட் அணிக்கு கசுன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார்.







