பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இரண்டு டெஸ்ட் இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் கமிந்து 164 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 108 ஓட்டங்களையும் பெற்றனர்.
2014ஆம் ஆண்டு குமார் சங்கக்காரவுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் இலங்கை அணிக்காக இரு இன்னிங்ஸிலும் டெஸ்ட் சதம் அடித்தார்.
ஒரு டெஸ்ட் அணியில் இரண்டு இன்னிங்சிலும் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது உலகில் மூன்றாவது முறையாகும்.
இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 280.
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸ் 188 ரன்கள்.
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 418 ரன்கள்.
வங்கதேச அணிக்கு 511 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.